நோவாவின் ஜலப்பிரளயம் உலகளாவிய ஜலப்பிரளயமா அல்லது உள்ளுர் ஜலப்பிரளயமா?

கேள்வி நோவாவின் ஜலப்பிரளயம் உலகளாவிய ஜலப்பிரளயமா அல்லது உள்ளுர் ஜலப்பிரளயமா? பதில் ஜலப்பிரளயத்தைக் குறித்ததான வேதாகமப் பகுதிகள் அது உலகளாவிய ஜலப்பிரளயம் தான் என்று தெளிவுபடுத்துகின்றன. “மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன” என்று ஆதியாகமம் 7:11 ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதியாகமம் 1:6-7 மற்றும் 2:6 சொல்லப்பட்டிருக்கிற முதல் ஜலப்பிரளய சூழ்நிலை இக்காலகட்டததில் நாம் அனுபவிக்கும் வெள்ளத்தை விட மிக வித்தியாசமானது ஆகும். இவைகளின் மற்றும் பிற வேதாகம விவரணங்களின் அடிப்படையில் பூமியானது ஒருமுறை…

கேள்வி

நோவாவின் ஜலப்பிரளயம் உலகளாவிய ஜலப்பிரளயமா அல்லது உள்ளுர் ஜலப்பிரளயமா?

பதில்

ஜலப்பிரளயத்தைக் குறித்ததான வேதாகமப் பகுதிகள் அது உலகளாவிய ஜலப்பிரளயம் தான் என்று தெளிவுபடுத்துகின்றன. “மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன” என்று ஆதியாகமம் 7:11 ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதியாகமம் 1:6-7 மற்றும் 2:6 சொல்லப்பட்டிருக்கிற முதல் ஜலப்பிரளய சூழ்நிலை இக்காலகட்டததில் நாம் அனுபவிக்கும் வெள்ளத்தை விட மிக வித்தியாசமானது ஆகும். இவைகளின் மற்றும் பிற வேதாகம விவரணங்களின் அடிப்படையில் பூமியானது ஒருமுறை தண்ணீரினால் மூடப்பட்டிருக்கிறது என்று அறிவிற்கு ஏற்புடைய நியாயமான நிலையில் ஊகிக்கப்படுகிறது. இந்த மூடுகை ஒரு நீராவி மூடுகையாக அல்லது தொடர்ச்சியான வளையங்களாக இருந்திருக்கலாம் அல்லது பனிப்படலங்களின் வளையங்களாக இருந்திருக்கலாம். இதனோடு இணைந்து ஆழத்தின் ஊற்றுக்கண்களின் தண்ணீரும் பூமியை நிரப்பி (ஆதியாகமம் 2:6) உலகளாவிய ஜலப்பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

இந்த ஜலப்பிரளயம் எந்த அளவிலான ஜலப்பிரளயம் என்பதைக் குறிக்கும் தெளிவான வசனங்கள் ஆதியாகமம் 7:19-23 வாயுள்ள பகுதி ஆகும். “ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று. அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.”

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேதப்பகுதியில் “எல்லாம்” என்கிற வார்த்தையை நாம் அடிக்கடி வருவதை காண்பது மட்டுமல்ல, வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று. அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன என்றும் வாசிக்கிறோம். இந்த விளக்கம் உலகளாவிய ஜலப்பிரளயம் முழு உலகத்தையும் மூடினது என்று தெளிவாக விளக்குகிறது. இந்த ஜலப்பிரளயம் நோவா வாழ்ந்த பகுதிக்கு மட்டுமே இருக்குமானால் தேவன் ஏன் நோவாவை பேழை கட்ட சொல்ல வேண்டும் அதற்கு பதிலாக அவனையும் மற்றும் விலங்குகளையும் வேறு இடத்திற்கு போகச் சொல்லியிருக்கலாமே? மற்றும் தேவன் ஏன் நோவாவை பூமியிலுள்ள எல்லா விதமான விலங்குகளும் இருக்கத்தக்கதான பெரிய பேழையை கட்டச் சொல்லவேண்டும்.? இது உலகளாவிய ஜலப்பிரளயமாக இருக்காவிட்டால் இங்கு பேழைக்கு அவசியமே இல்லை.

இந்த உலகளாவிய ஜலப்பிரளயத்தைக் குறித்து 2 பேதுரு 3:6-7 ல், “அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு குறிப்பிடுகிறார். இந்த வசனத்தில் பேதுரு வரவிருக்கிற உலகளாவிய நியாயத்தீர்ப்பை நோவாவின் காலத்தில் அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததற்கு ஒப்பிடுகிறார். மேலும் அநேக வேதாகம எழுத்தாளர்கள் வரலாற்றுப் பூர்வமான இந்த உலகளாவிய ஜலப்பிரளயத்தை ஏற்றுக்கொள்கின்றனர் (ஏசாயா 54:9; 1பேதுரு 3:20; 2பேதுரு2:5; எபிரேயர் 11:7). மேலும் இயேசு கிறிஸ்து இந்த உலகளாவிய ஜலப்பிரளயத்தை விசுவாசிப்பதோடு இதை அவர் வரும்போது வரவிருக்கிற உலகத்தின் அழிவுக்கு ஒப்பிட்டும் கூறுகிறார் (மத்தேயு 24:37-39; லூக்கா 17:26-27).

இது உலகளாவிய ஜலப்பிரளயம் தான் என்பதற்கு வேதாகமத்திற்கு வெளியேயிருந்தும் அநேக ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கண்டத்திலும் புதைபடிவ புதைகுழிகள் காணப்படுகிறது பரந்த அளவிளான தாரவங்களை விரைவில் மூடுவதற்கு தேவையான அதிக அளவிளான நிலக்கரி வைக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் மலைகளுக்கு மேல் கடற்படிமங்கள் காணப்படுகின்றன. உலகத்தின் எல்லா பகுதிகளிலுமுள்ள கலாச்சாரங்களில் இந்த ஜலப்பிரளயத்தைக் குறித்ததான புராணக்கதைகள் இருக்கின்றன. இந்த எல்லா உண்மைகளும் மற்றும் பிற உண்மைகளும் நோவாவின் காலத்தில் உண்டானது உலகளாவிய ஜலப்பிரளயம் தான் என்பதற்கு ஆதாரங்களாக இருக்கின்றன.

[English]



[முகப்பு பக்கம்]

நோவாவின் ஜலப்பிரளயம் உலகளாவிய ஜலப்பிரளயமா அல்லது உள்ளுர் ஜலப்பிரளயமா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *